நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா மரண வழக்கில் பிரமுகரின் பிள்ளை சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை: போலிஸ்

பாப்பார்:

ஷாரா மரண வழக்கில் முக்கிய பிரமுகரின் பிள்ளை சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

பாப்பர் மாவட்ட போலிஸ் தலைவர் கமாருடின் அம்போ சக்கா இதனை கூறினார்.

படிவம் 1 மாணவியான ஷாரா கைரினா மகாதீரின் மரணம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் இந்த மரண விவகாரத்தில்  அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள்,  சபா அரண்மனை உள்ளிட்ட பிரமுகர்களில் பிள்ளைக்கு தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் இம் மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் சமரசம் இல்லாமல் ஒவ்வொரு அம்சமும் ஆராயப்படுவதை உறுதி செய்வதில் தனது போலிஸ்துறை உறுதிபூண்டுள்ளது.

இந்த வழக்கில் எந்த விஐபி குழந்தைகளின் தொடர்பும் இருப்பதைக் காட்டும் எந்த ஆதாரமும் இதுவரை போலிஸ் விசாரணையின் முடிவுகளில் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset