நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6,911 அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை மலேசியா பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது: தெங்கு ஸப்ரூல்

கோலாலம்பூர்:

6,911 அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை  மலேசியா பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ  தெங்கு ஸப்ரூல் இதனை கூறினார்.

அமெரிக்காவில் இருந்து 11,260 பொருட்கள் மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இதில் அமெரிக்கா கோரிய 6,911 பொருட்களுக்கான வரி விகிதங்களை பூஜ்ஜியமாகக் குறைக்க மலேசியா ஒப்புக்கொண்டுள்ளது.

இது 61 சதவீதத்திற்கு சமமாகும்.

மேலும்  இரு நாடுகளுக்கு இடையிலாக பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை சந்தை அணுகலை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்கும் இடையே திறந்த இருவழி வர்த்தக ஓட்டங்களை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset