நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் தண்ணீர் கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயரும்: அமீருடீன் ஷாரி

ஷாஆலம்:

சிலாங்கூரில் தண்ணீர் கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்படவுள்ளது.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமீருடீன் ஷாரி இதனை தெரிவித்தார்.

இந்த கட்டண உயர்வில் தரவு மையங்களுக்கான புதிய உயர் விகிதமும் அடங்கும்.

மேலும் வீடுகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

காண்டோமினியங்கள், தோட்டங்கள், அரசு குடியிருப்புகள் ஒரு கன மீட்டருக்கு 2.09 ரிங்கிட் என்ற விகிதத்தில் 41 சென் அதிகமாக வசூலிக்கப்படும்.

ஆனால் காண்டோமினியங்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் மாதத்திற்கு 173 ரிங்கிட்டாக மாறாமல் உள்ளது.

சிலாங்கூர் நீர் வழங்கல் நிறுவனமான ஆயர் சிலாங்கூரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பெறும் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த  புதிய கட்டணங்கள் பொருந்தும்.

சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டருக்கும் அதிகமான குளிரூட்டலுக்கான அதிக நீர் பயன்பாடு காரணமாக தரவு மையங்களுக்கு ஒரு கன மீட்டருக்கு 5.31 ரிங்கிட்டாக வசூலிக்கப்படும்.

மாதத்திற்கு 20 கன மீட்டருக்கும் குறைவாகப் பயன்படுத்தும் வீடுகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

இது இன்னும் ஒரு கன மீட்டருக்கு 0.65 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வீட்டு வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 6.50 ரிங்கிட்டாகவே உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset