நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி ஷாரா மரணத்தில் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

கோத்தா கினபாலு:

மாணவி ஷாரா மரணத்தில் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களான  ஹமீத் இஸ்மாயில், ஷாஹ்லான் ஜுப்ரி இதனை கூறினர்.

பாப்பாரில் உள்ள துன் டத்து முஸ்தபா லிமாவான் இஸ்லாமிய இடைநிலைப் பள்ளியில் படிவம் 1 மாணவி ஷாரா கைரினா மகாதீர் மரணமடைந்தார்.

13ஆவது வயதாக ஷாராவின் மரணத்தில் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உடனடியாக  விசாரணை நடத்த வேண்டும்.

ஷாராவின் தாயார் நோரைடா லாமத் கடந்த ஜூலை 30 அன்று போலிஸ் புகார் செய்துள்ளார்.

மேலும் விசாரணைக்காக அவரது மறைந்த மகளின் கல்லறையை மீண்டும் தோண்ட வேண்டும் என்றும் அவர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

எங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இணங்க நேற்று  கோத்தா கினாபாலுவில் உள்ள சட்டத்துறை தலைவர்  அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதினோம்.

அதன் அடிப்படையில் விசாரணையை விரைவில் முடிக்க போலிசார் உதவுமாறு எங்கள் கோரிக்கையை சட்டத்துறை தலைவர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset