நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலை வரி இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரும் அடங்கும்: ஜேபிஜே

கோலாலம்பூர்:

சாலை வரி இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரும் அடங்கும்.

சாலை போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் முஹம்மத் கிப்லி மா ஹசான் இதனை கூறினார்.

சாலை வரி செலுத்தாமல் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த  சோதனையில் கிட்டத்தட்ட 53 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாகனங்களில் ஒரு முக்கிய தொழிலதிபருக்குச் சொந்தமான 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கூலினான் காரும் அடங்கும்.

சாலை வரி, காப்பீட்டைப் புதுப்பிக்க மறந்தது ஒரு பொதுவான அல்லது  ஏற்றுக்கொள்ள முடியாத சாக்குப்போக்கு கூறப்பட்டன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset