நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சக மாணவரை அடிக்கும் மாணவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்: ஃபட்லினா

புத்ராஜெயா:

சக மாணவரை அடிக்கும் மாணவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

காஜாங்கில் உள்ள ஒரு பேரங்காடியில் பள்ளி வகுப்புத் தோழர் ஒருவரை அடித்ததாக சந்தேகத்தின் பேரில் மாணவர் குழுவை போலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இம் மாணவர்கள் குழு மீது கல்வியமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

எந்தவொரு தவறுக்கும் கல்வி அமைச்சு சமரசம் செய்யாது.

இந்த வழக்கில் காவல்துறை விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள்,  அனைத்து பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்வதற்காக தலையீட்டுத் திட்டங்களை செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளையும் மாவட்ட கல்வி அலுவலகத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset