நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

8ஆவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான்: போலிஸ்

போர்ட் கிள்ளான்:

எட்டாவது மாடியில் இருந்து விழுந்ததாகக் கருதப்படும் நான்கு வயது சிறுவன் மரணமடைந்தான்.

இச் சம்பவம் இன்று காலை போர்ட் கிள்ளானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தாக  தென் கிள்ளான்  துணை  போலிஸ் தலைவர் கமலாரிபின் அமான் ஷா தெரிவித்தார்.

இன்று காலை 8 மணியளவில் அவசர அழைப்பு மூலம்  போலிசாருக்கு ஒரு குழந்தை கட்டிடத்தில் இருந்து விழுந்ததாக தகவல் கிடைத்தது.

குழந்தையின் தந்தை வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரது தாயார் தனது இரண்டாவது குழந்தையை  பராமரிப்பாளரிடம் அனுப்ப வீட்டை விட்டு வெளியேறியபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னலிலிருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் அவசர சிகிச்சைக்காக கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் சிகிச்சையின் போது இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset