நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ.3000 கோடி வங்கிக் கடன் மோசடி: அனில் அம்பானிக்கு சம்மன்

புது டெல்லி:

ரூ.3000 கோடி யெஸ் வங்கியில் கடன் பெற்று  மோசடி செய்த வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியது.

கடந்த 2017 - 19 வரையிலான காலக்கட்டத்தில், அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு, யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் பெற்று வேறு பணிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

முன்னதாக, அனில் அம்பானியை மோசடியாளர் என எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்து, அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மனில் தெரிவித்துள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset