நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல்

புது டெல்லி:

தொழிலதிபர் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

இந்திய பொருளாதாரம் செயலிழந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது சரிதான் என்றும் இதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனர்.

இந்திய, ரஷிய பொருளாதாரம் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விமர்சனத்தை சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை ராகுல் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல், இந்திய பொருளாதாரம் செயலிழந்து விட்டது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அது உண்மைதான்.

தொழிலதிபர் கௌதம் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset