நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடக தர்மஸ்தலாவில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்திய சோதனையின்போது 6வது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

1995 முதல் 2014ம் ஆண்டு வரையில் கோயிலில் பணியாற்றிய காலத்தில் பள்ளி குழந்தை, பெண்கள் உள்ளிட்ட பலரை பாலியல் வன்கொடுமை செய்து சடலங்களைப் புதைத்ததாக
தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத சுவாமி கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் பணியாளர் புகார் அளித்திருந்தார்.

தென்கன்னட மாவட்டத்தின் மல்லகட்டே பகுதியில் முகாமிட்டுள்ள விசாரணை நடத்திய வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த இரண்டு நாள்களாக குழிகள் தோண்டி சடலங்களைக் கண்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

5 குழிகளைத் தோண்டியிருந்த நிலையில், மனித சடலங்கள் புதைக்கட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.  6ஆவது குழியில் மனித எலும்புகள் இரு மண்டை ஓடுகளும் கிடைத்துள்ளதாக எஸ்ஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset