நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பள்ளிவாசல் அருகே குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. விடுவிப்பு

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் பள்ளிவாசல் அருகே குண்டு வெடித்த வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட ஏழு பேரை மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

2008ம் ஆண்டு நடந்த இந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை நீதிமன்றம் 17 வருடங்களுக்கு பிறகு தள்ளுபடி செய்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர். ஹிந்து பயங்கரவாதம் என்று முதன்முதலில் வெளிப்பட்ட வழக்காக இது கருதப்படுகிறது.

இந்தநிலையில், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதை என்பது நிரூபிக்கப்படவில்லை. மோட்டார் சைக்கிளில்தான் வெடிகுண்டு  பொருத்தப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படவில்லை.

புரோஹித்துக்கு பணம் விநியோகிக்கப்பட்டது உண்மைதான் என்றாலும், அது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset