நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13வது மலேசிய திட்டத்தில் புகையிலை, வேப், மதுபானங்களுக்கு புதிய வரியை பிரதமர் அறிவித்ததை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்கிறது: சுப்பாராவ்

பினாங்கு:

புகையிலை, வேப், மதுபானப் பொருட்கள் மீதான பொருட்களுக்கு வரிகளை அறிவித்ததற்காக மலேசியப் பிரதமருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தனது  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இதனை புற்றுநோய் வரி என்று நாம் அழைக்க வேண்டும்.

13வது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்யும் போது புகையிலை, வேப், மதுபானம் மீது வரிகளை விதித்த பிரதமரின் கருத்திற்கு, பி.ப.சங்கம் முழுமையாக உடன்படுவதாக அச்சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி சுப்பாராவ் தெரிவித்தார்.

இந்த வரிகள் தொற்றா நோய்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும்; இளைய தலைமுறையினர் இந்த புற்றுநோயை உண்டாக்கும் பழக்கங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் என்றார் அவர்.

சுகாதாரப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் பிரதமர் காட்டும் அக்கறை, அவரது உறுதி குறித்து பி.ப.சங்கம் மகிழ்ச்சியடைவதாக சுப்பாராவ் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset