நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ சரவணன் என்பவர் தனிநபர் அல்ல; அவர் சமுதாயத்தின் பிரதிநிதி; அதிருப்திகளை வெளிப்படுத்திய டத்தோஸ்ரீ சரவணனை சாடுவது அநாகரிகமான செயலாகும்: டத்தோ லோகபாலா

கோலாலம்பூர்:

அதிருப்திகளை வெளிப்படுத்திய மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனை சாடுவது அநாகரிகமான செயலாகும்.

பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகபாலா இதனை கூறினார்.

மத்திய அரசாங்கத்தில் உள்ள அதிருப்திகள் குறித்து ஊடக சந்திப்பில் அவர் பேசியிருந்தார்.

குறிப்பாக அமைச்சர் பதவிகள் உட்பட அனைத்திலும் ஏற்பட்ட புறக்கணிப்புகள் குறித்து அவர் பேசியிருந்தார்.

மஇகாவுக்கு நேர்ந்த அநீதிகள் குறித்து அவர் பேசியுள்ளார்.

ஆனால் அவரின் ஆதங்கங்கள் குறித்து கேள்வி எழுப்புவதும் கேலி செய்வதும் அநாகரிகமான செயலாகும்.

மஇகா ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது. அதனால் உங்களுக்கு என்ன தகுதி உண்டு என ஒரு அரசியல் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அப்படி என்றால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இந்திய சமுதாயம் கேள்வி எழுப்பக் கூடாதா?

ஒருவேளை எழுப்பினால் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்புவார்களா?

ஆக அரசியல் தலைவர்கள் பேசும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

டத்தோஸ்ரீ சரவணன் என்பவர் தனிநபர் அல்ல. அவர் சமுதாயத்தின் பிரதிநிதியாக உள்ளார்.

அவரை கேலி செய்வது சமுதாயத்தை கேலி செய்வதாகும் என்று டத்தோ லோகபாலா நினைவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset