
செய்திகள் தொழில்நுட்பம்
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
புது டெல்லி:
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவும் இணைந்து உருவாக்கிய புவி கண்காணிப்புக்கான நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
நிசார் செயற்கைக்கோள் இந்தியாவின் ஜிஎஸ்எல்வி எஃப்-16 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 2,392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும்.
இதில் எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்பு, பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெறமுடியும்.
இந்த செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து, துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை அனைத்து பருவ நிலைகளிலும் வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am