நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

162 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போலி தூதர்: விசாரணையில் போலீஸார் பகீர்

காஜியாபாத்:

உத்தர பிரதேசத்தில் போலி துாதரகம் நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் கடந்த 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு 300 கோடி ரூபாய் மேல் மோசடி செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெஸ்டார்டிகா, மைக்ரோநேஷன் எனப்படும் அங்கீகரிக்கப்படாத சிறிய உலக நாடுகளின்  துாதரகம் என்று கூறி ஹர்ஷ்வர்தன் ஜெயின் நடத்தி வந்தார்.

காஜியாபாதில் ஆடம்பர பங்களாவை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர் ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வெஸ்டார்டிகா நாட்டின் கவுரவ பிரதிநிதியாக இவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தன்னை அந்நாட்டு துாதர் எனக்கூறி வலம் வந்து 162 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ரூ.300 வரையில் மோசடி செய்துள்ளது தற்போது வரையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல போலி சாமியார்களுடன் தொடர்பு வைத்து ஜெயின் மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset