நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு 

திருச்சி:

திருச்சியிலுள்ள  கேம்பியன் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 30-ஆம் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

திருச்சியிலுள்ள  கேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டில் பயின்ற 90 மாணவர்கள்,  30-வது ஆண்டில் சந்தித்தனர். 

திருச்சியில் ஜூலை 26 ஆம் தேதி  இந்த சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். 

மேலும், தாங்கள் படித்த பள்ளிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ. 1 லட்சம் நன்கொடையை கேம்பியன் பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் பால்ராஜிடம் வழங்கினர்.

May be an image of 4 people, dais and text

மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கும் நேரடியாகச் சென்று தங்களுடைய பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக அவர்கள் கூறினர். 

No photo description available.

May be an image of 8 people, wedding and text

முன்னாள் மாணவர்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியை சொற்களில் சொல்ல இயலாது. நண்பர்கள் அனைவரும்  தத்தமது வாழ்க்கை நிலையையும் கடந்து வந்த பாதையும் பகிர்ந்துகொண்டனர். இது அற்புதமான தருணம் என்று மலேசியாவில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset