
செய்திகள் இந்தியா
மோடி - டிரம்ப் நட்பு வெற்றுத்தனமானது: காங்கிரஸ்
புது டெல்லி:
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் ராணுவ மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் 25க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார். ஆனால் இதனை இந்தியா மறுத்துவருகிறது.
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்திருந்தர்.
பாகிஸ்தானுடன் அமெரிக்கா இணக்கம் காட்டிவருவது, இந்தியாவின் தூதரக வியூகங்களுக்கு கிடைத்த தோல்வியாகும். கடந்த 2 மாதங்களில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பிரதமர் மோடியும் அவரது புகழ் பாடுபவர்களின் கூற்றுகளும் பொய்யென அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது என்று மிரட்டி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தான் நிறுத்தியதாக கடந்த மே 10ஆம் தேதியில் இருந்து இதுவரை 25 முறை கூறியுள்ளார் டிரம்ப்.
பயங்கரவாத எதிர்ப்பில், அமெரிக்காவின் தனித்துவமான கூட்டாளி பாகிஸ்தான் என்று அமெரிக்க ராணுவ உயரதிகாரி மைக்கேல் குரில்லா கடந்த ஜூன் 10ஆம் தேதி குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் 18ஆம் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் முன்னெப்போதும் இல்லாதபடி பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீருக்கு டிரம்ப் விருந்தளித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் இசாக் தாரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ரூபியோ, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் ஒத்துழைப்பதாக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.
எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு கடந்த 2020}இல் பிரதமர் மோடி அளித்த நற்சான்று, நமது நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியது.
இப்போது, டிரம்ப்புடன் மோடி பெருமையோடு குறிப்பிடும் நட்பு வெற்றுத்தனமானது என்பது நிரூபணமாகி வருகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am
கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்
July 29, 2025, 10:21 am