நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆல் ஸ்டார் ஆட்டத்தை தவறவிட்டதால் இந்தர்மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாட மாட்டார்

நியூயார்க்:

ஆல் ஸ்டார் ஆட்டத்தை தவறவிட்டதால் இந்தர்மியாமி அணிக்காக லியோனல் மெஸ்ஸி விளையாட மாட்டார்.

இந்த வார இறுதியில் சின்சினாட்டி எப்சி எதிரான போட்டியில் லியோனல் மெஸ்ஸி,  ஜோர்டி ஆல்பா இன்டர் மியாமிக்காக விளையாட மாட்டார்கள்.

ஆல்-ஸ்டார் ஆட்டத்தில் இல்லாததால் அவர்களை இடைநீக்கம் செய்ததாக  எம்எல்எஸ் அறிவித்தது.

எம்எல்எஸ் விதிகளின் கீழ், உறுதிப்படுத்தப்பட்ட காயம் இல்லாமல் ஆல்-ஸ்டார் கேமைத் தவறவிடும் எந்த வீரருக்கும் ஒரு ஆட்ட இடைநீக்கம் தானாகவே விதிக்கப்படும். 

இந்த முன்னுதாரணமானது. 2018இல் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் வழக்கு உட்பட இதற்கு முன்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார ஆல் ஸ்டார் ஆட்டத்தில் மெஸ்ஸி பங்கேற்கவில்லை.

அந்த நேரத்தில் எந்த அதிகாரப்பூர்வ காரணமும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset