நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தேக்குவாண்டோ விளையாட்டாளர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்: மாஸ்டர் நாகராஜன்

ஈப்போ: 

தேக்குவாண்டோ என்ற தற்காப்பு கலையை கற்று தேர்ந்தவர்கள் மிகவும் கட்டொழுங்குடன் தமது வாழ்க்கையை வழிநடத்தி செல்பவர்கள். ஆகையால், இதுபோன்ற தற்காப்பு கலைகள் மனிதாபிமானம் மற்றும் கட்டொங்கு நடவடிக்கைகள் போன்ற விவகாரங்களில் சிறந்து விளங்கும் பண்பாளர்கள் என்று தேக்குவாண்டோ மாஸ்டர் நாகராஜன் என்ற ராஜன் கூறினார்.

அண்மையில் அனைத்துலக ரீதியில் தாய்லாந்து பாங்காக்கில் நடைபெற்ற தேக்குவாண்டோ போட்டியில் மலேசியா நாட்டை பிரதிநிதித்த தம்முடைய விளையாட்டாளர்கள் 4 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கங்களை வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

இவர்கள் பல இனத்தை சேர்ந்த விளையாட்டாளர்கள் என்று அவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வில் அவர் இதனை சொன்னார்.

இத்தகைய தற்காப்பு கலைகள் பயின்றவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடியவர்கள்.

ஆகையால், இக்கலைகளை கற்று தேர்ந்தவர்கள் மிகவும் தைரியத்துடன் எதனையும் எதிர்நோக்கும் வல்லமை கொண்டவர்கள். தற்போது என்னுடைய 500 மாணவர்கள் இத்தகைய பண்பினை கொண்டவர்கள் என்று அவர் மகிழ்ச்சிகரமாக தெரிவித்தார்.

கடந்த 43 வருடங்களாக தேக்குவாண்டோ தற்காப்பு கலையில் தீவிரமாக ஈடுபட்டு பல விளையாட்டாளர்களை தேசிய ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் விளையாட உருவாக்கப்பட்டனர்.

தற்போது 100 பயிற்சியாளர்கள் தம்மிடம் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் 7 மாநிலங்களிலும் ஈப்போ வட்டாரத்தில் 10 பயிற்சி மையங்களையும் வழிநடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய கலைகளை பள்ளிகளில் மாணவர்கள் புறப்பாட செயல்நடவடிக்கை வாயிலாக கற்பது மிகவும் அவசியமாகும். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்துற்கு மட்டுமன்றி அவர்களின் புறப்பாட புள்ளிகளை அதிகரித்து அவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

இம்முறை பாங்காக் செல்லும் மாணவர்களுக்கு நிதியுதவி போக்குவரத்து செலவுகள் செய்த ஈப்போ பாராட் ம இ கா தொகுதித்தலைவர் எஸ்.ஜெயகோபி மற்றும் அவர் தம் நிர்வாகத்திற்கு நன்றி. அத்துடன், உதவியும் ஆதரவும் வழங்கிய பெற்றோர்கள், வணிகர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அவர் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset