
செய்திகள் விளையாட்டு
2026 உலகக் கிண்ண போட்டியில் லியோனல் மெஸ்ஸி விளையாடுவார்: அர்ஜெண்டினா
பியோனஸ் அயர்ஸ்:
2026ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் லியோனல் மெஸ்ஸி விளையாடுவார்.
அர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்ஜண்டினாவின் சாம்பியன் பட்டத்தை பாதுகாக்க லியோனல் மெஸ்ஸி தலைமை தாங்குவார்.
இதன் வாயிலாக ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் தேசிய அணியில் இணைந்துள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தசை காயம் காரணமாக மார்ச் மாத அனைத்துலக போட்டிகளில் மெஸ்ஸி பங்கேற்கவில்லை.
பின் சிலி அணிக்கு எதிரான போட்டியில் துணை வீரராக களமிறங்கி ஜூன் மாத இறுதியில் கொலம்பியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடத் தொடங்கினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே உலகக் கிண்ண போட்டிக்கு அர்ஜெண்டினா தகுதி பெற்று விட்டது.
இருந்தாலும் இப்போது தங்கள் கடைசி இரண்டு போட்டிகளுக்குத் தயாராகி வருகிறது.
செப்டம்பர் 9 ஆம் தேதி பியூனஸ் அயர்ஸில் வெனிசுலாவுக்கு எதிராகவும், செப்டம்பர் 14 ஆம் தேதி வெளிநாட்டில் நடக்கும் ஈக்வடாருக்கு எதிராகவும் மெஸ்ஸி களமிறங்குவார் என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 1:39 pm
சீனப் பொது பூப்பந்து: அரையிறுதியில் மகளிர் இரட்டையர் தோல்வி
July 26, 2025, 9:58 am
வாஷிங்டன் பொது டென்னிஸ்: காலிறுதியில் மெத்வதேவ் தோல்வி
July 26, 2025, 9:51 am
சோன் இயோங் மின்னை வாங்க லாஸ் ஏஞ்சல்ஸ் எப்சி ஆர்வமாக உள்ளது
July 26, 2025, 9:49 am
ஆல் ஸ்டார் ஆட்டத்தை தவறவிட்டதால் இந்தர்மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாட மாட்டார்
July 25, 2025, 10:23 am
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
July 25, 2025, 10:20 am
மால்டினியின் சட்டையை அணிந்து ஏசிமிலானின் நிர்வாகத்தை கேலி செய்யும் தியோ ஹெர்னாண்டஸ்
July 24, 2025, 9:16 pm
தேக்குவாண்டோ விளையாட்டாளர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்: மாஸ்டர் நாகராஜன்
July 24, 2025, 10:33 am