நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

செல்சி நட்சத்திரம் லியம் டெலாப்பின் காதலுக்கு முற்றுப்புள்ளி 

லண்டன்:
செல்சியின் புதிய தாக்குதல் ஆட்டக்காரரான லியம் டெலாப்பின் காதலி, சமூக ஊடக நட்சத்திரமும் மாடலுமான லியானா பால், இவர்களது காதல் முடிவடைந்ததை உறுதி செய்துள்ளார்.

லியம் டெலாப், கடந்த பருவத்தில் இப்ஸ்விச் டவுன் அணியில் மிகச்சிறப்பாக விளையாடியதையடுத்து, £30 மில்லியனுக்கு செல்சியில் சேர்ந்தார். செல்­சி அணியுடன் கிளப் உலகக் கோப்பையில் பிஎஸ்ஜியைக் கைதூக்கச் செய்த வெற்றியிலும் முக்கிய பங்கு வகித்தார்.

அவருடன் ஜோவோ பெட்ரோ மற்றும் நிக்கோலஸ் ஜாக்ஸன் போன்றோர் முதலிடம் பெறப் போட்டியிட உள்ளனர். ஆனால், அவர் விளையாட்டு வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், அவரது காதலுக்கு புள்ளி வைத்து விட்டதாக பால் இன்ஸ்டாகிராம்  கேள்வி பதிலில் கூறியுள்ளார்.

“எனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது இடத்தில் பேச விரும்பவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டதால் பதிலளிக்கிறேன்…ஆம், நான் இப்போது சிங்கிள்,” என கூறியுள்ளார் லியானா பால்.

டெலாப்பும் பாலும் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தனர். தற்போது அவர்கள் இருவரும் தங்களது வழிகளை பிரித்துக் கொண்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset