
செய்திகள் மலேசியா
உணவகத்தில் இருந்த 6 வயது சிறுவன் காணாமல் போனான்
ஜொகூர்பாரு:
ஜொகூர்பாருவின் தாமான் புக்கிட் இண்டாவில் உள்ள கோபிட்டியத்தில் இருந்து இன்று அதிகாலை 6 வயது சிறுவன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இன்று அதிகாலை சுமார் 2.15 மணியளவில் எம். திஷாந்தை காணவில்லை என அவரது 36 வயது தந்தை போலிசில் புகார் அளித்ததாக இஸ்கண்டார் புத்ரி போலிஸ் தலைவர் எம். குமரசன் தெரிவித்தார்.
அச்சிறுவன் தோராயமாக 110 செ.மீ உயரம், 19 கிலோகிராம் எடை, கூர்மையான மூக்கு மற்றும் வெளிர் தோல் கொண்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிறுவன் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் புலனாய்வு அதிகாரி இ. கோமதியை 010-3812804 என்ற எண்ணில் அல்லது இஸ்கண்டார் புத்ரி மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 07-5113622 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 9:34 pm
சொந்தக் கட்சியே என்னை நிராகரித்ததால் நான் பதவி விலகினேன்: துன் மகாதீர்
July 26, 2025, 9:33 pm
உடல் நலக் குறைவு காரணங்களால் அன்வார் எதிர்ப்பு பேரணியில் ஹாடி கலந்து கொள்ளவில்லை
July 26, 2025, 6:39 pm
அன்வார் எதிர்ப்பு பேரணி நிறைவடைந்தது; பொதுமக்கள் கலையத் தொடங்கினர்
July 26, 2025, 3:12 pm