நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொந்தக் கட்சியே என்னை நிராகரித்ததால் நான் பதவி விலகினேன்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

சொந்தக் கட்சியே என்னை நிராகரித்ததால் நான் பதவி விலகினேன் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அடிச்சுவடுகளைப் பின்பற்றி 2020 இல் பெர்சத்துவால் நிராகரிக்கப்பட்ட பிறகு பிரதமர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். 

டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த எதிர்க்கட்சி பேரணியில் பேசிய அவர்,

5ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது முறையாக வகித்த பதவியில் இருந்து ராஜினாமா செய்து, மொஹைதின் யாசின் நியமிக்கப்பட்டதை அவர்  நினைவு கூர்ந்தார்.

மகாதீரின் இந்த ராஜினாமா நடவடிக்கையால் அப்போது இருந்த  நம்பிக்கை கூட்டணி 1.0 அரசாங்கம் வீழ்ச்சியடைந்து.

தேசியக் கூட்டணி  தலைவர் மொஹைதின் யாசின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

நான் கட்சியின் ஆதரவைப் பெறவில்லை, ராஜினாமா செய்தேன்.

மக்கள் விரும்பவில்லை என்றால் பதவி விலக வேண்டும். எனவே அன்வார் பதவி விலக வேண்டும்.

மேலும் பல வெளிநாட்டுத் தலைவர்களும் ஆதரவைப் பெறாததால் ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார்.

பேரணியில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அன்வாருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறதா என்றும் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset