நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் எதிர்ப்பு பேரணி நிறைவடைந்தது; பொதுமக்கள் கலையத் தொடங்கினர்

கோலாலம்பூர்: 

தேசிய கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்வார் எதிர்ப்பு பேரணி சற்று முன் நிறைவடைந்தது. 

பேரணியில் கலந்துகொண்டவர்கள் டத்தாரான் மெர்டேக்காவிலிருந்து கலையத் தொடங்கினர்.

இந்த அன்வார் எதிர்ப்பு பேரணியில் இரு முன்னாள் பிரதமர்களான டான்ஸ்ரீ முஹைதீன் யாசின், துன் டாக்டர் மகாதீர் முஹம்மத், பெரிக்காத்தான் நேஷனல் கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சுமார் 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் பேர் வரை பொதுமக்கள் கலந்து கொண்டதாக காவல்துறை அனுமானித்துள்ளனர்.

பிரதமர் அன்வார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் முழக்கஙகளை எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset