நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அரியாஸை அல் நசருக்கு  கொண்டு வரும் முயற்சியில் ரொனால்டோ தோல்வி

ரியாத்:

அரியாஸை அல் நசருக்கு  கொண்டு வரும் முயற்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தோல்வி கண்டார்.

கொலம்பிய  நாட்டின் தேசிய வீரராக ஜோன் அரியாஸ் விளங்குகிறார். இவர் ஃப்ளூமினென்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார்.

அவ்வணியில் இருந்து வெளியேறிய அவர்  உலகெங்கிலும் உள்ள பல பெரிய கிளப்புகளுடன் இணைக்கப்பட்டு பேசப்பட்டார்.

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரை அல் நசரில் தன்னுடன் சேர சமாதானப்படுத்த முயற்சித்தார்.

ஆனால் அதில் அவர் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.

காரணம் அடுத்த சீசனில்  ஜான் அரியாஸ்  வேல்வேர்ஹாம்டன் அணிக்கு மாற முடிவு செய்துள்ளார்.

அவ்வணியுடனான ஒப்பந்தத்திலும் அரியாஸ் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset