நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

புதிய தாக்குதல் ஆட்டக்காரர் இல்லாமல் புதிய பருவத்தை தொடங்கவுள்ளது மன்செஸ்டர் யுனைடெட்

லண்டன்
2025/2026ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், மன்செஸ்டர் யுனைடெட் புதிய ஆட்டக்காரரை ஒப்பந்தம் முடியாமல் தவிக்கிறது. இதனால், அடுத்த மாதம் அர்செனலை எதிர்த்து நடைபெறும் முதல் லீக் போட்டியில் கோல் அடிக்கும் முன்னணி வீரர் இல்லாமல் களமிறங்கும் அபாயத்தில் உள்ளது.

இந்த செய்தி, மார்கஸ் ராஷ்ஃபோர்ட் பார்சிலோனாவுக்கு கடன் ஒப்பந்தத்தில் சென்ற அதே நாளில் வெளியாகியுள்ளது. யுனைடட் நிர்வாகம், புதிய தாக்குதல் ஆட்டக்காரரை ஒப்பந்தம் செய்யாமல் புதிய பருவத்தில் தொடங்க வாய்ப்புண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.

ரூபென் அமோரிம் தலைமையிலான யுனைடெட், இப்பருவத்தில் ஏற்கனவே £130 மில்லியனை செலவழித்து, ப்ரயன் எம்பூமோ மற்றும் மாதியுஸ் குன்ஹா ஆகியோரைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும், அமோரிமின் 3-4-2-1 அமைப்பில் அவர்கள் இருவரும் நம்பர் 10  செயல்பட உள்ளனர்.

பிரீமியர் லீக் அனுபவமுள்ள தாக்குதல் ஆட்டக்காரரை தேடும் அமோரிம், தனது முதன்மை இலக்கு லியம் டெலாப்பை, அவர் செல்சிக்கு செல்ல தீர்மானித்ததால் இழந்தார். அதேபோல் விக்டர் ஜோகேரெஸ் (அர்செனல்) மற்றும் ஹ்யூகோ எகிடிகே (லிவர்பூல்) ஆகியோரும் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியில் இணைய இணக்கம் காட்டவில்லை.

முன்னதாக அவ்வணி பணத்தை திரட்டுவதற்காக  வீரர்களை விற்க முயல்கிறது. மேலும், பிஎஸ்ஜியின் ரண்டால் கோலோ முவானி, அஸ்டன் வில்லாவின் ஒல்லி வாட்கின்ஸ், லைப்ஸிகின் பென்ஜமின் செஸ்கோ மற்றும் டொமினிக் கால்வர்ட்-லுவின் போன்ற விலையில்லா வீரர்களுடன் யுனைடெட் தொடர்பில் உள்ளது.

மேலும், செல்சியுடன் அலெஹாண்ட்ரோ கார்னாசோவை கொடுத்து, நிக்கோலஸ் ஜாக்ஸனை பெறும் பரிமாற்ற ஒப்பந்தமும் பரிசீலனையில் உள்ளது.

இந்த சிக்கலான சூழலில், அமோரிம் – எம்பூமோவின் ஒப்பந்தத்தை முடித்து, அவரை யுனைடட் அமெரிக்க பயிற்சிப் பயணத்திற்கு முன்னதாக இணைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் தாக்குதல் ஆட்டக்காரரை தோடும் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset