நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மன்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து மார்கஸ் ராஷ்ஃபோர்ட் விடைபெற்றார் “இது என் அடுத்த அத்தியாயம்” என உருக்கம்

லண்டன்

மன்செஸ்டர் யுனைடெட்டின் முன்னணி வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்ட், தற்போதைய மாற்றக் காலகட்டத்தில் இருந்து விலகி, ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் ஒரு ஆண்டுகால  ஒப்பந்தத்தின் மூலம் இணைந்துள்ளார்.

இக்கடன் ஒப்பந்தத்தில், அடுத்த பருவத்தில் சுமார் £30 மில்லியன் அடிப்படிஅயில் நிரந்தர மாற்றம் அல்லது தனிப்பட்ட விருப்பம்  ஆகியவைபார்சிலோனாவுடனான ஒப்பந்ததில் அடைங்கியுள்ளது.

இந்த பருவத்தில் மன்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து நிராகரிக்கப்பட்ட ஐந்து வீரர்களில் ராஷ்ஃபோர்ட் ஒருவராக இருந்தார். ஜேடன் சாஞ்சோ, ஆன்டனி, அலெஹாண்ட்ரோ கார்னாசோ மற்றும் டைரல் ஆகியோர் அடங்குவர். அவர்களில் முதல் வீரராக ராஷ்ஃபோர்ட் அணியை விட்டு வெளியேறினார்.

அஸ்டன் வில்லா அணியில் கடந்த பருவத்தின் இரண்டாம் பாதியில் கடன் அடிப்படையில் விளையாடிய ராஷ்ஃபோர்ட், மன்செஸ்டர் பற்றி மோசமாக எதுவும் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். ஆனாலும், “அந்தக் கிளப் இன்னமும் மாற்றத்தைக் கடந்து செல்கிறது” என்றும் குறிப்பிட்டார்.

"மான்யூ குறித்து எனக்கென்று சொல்லவேண்டிய மோசமான விஷயம் ஒன்றுமில்லை. என் வாழ்க்கையிலும், என் விளையாட்டு பயணத்திலும் மிக முக்கியமான பங்காற்றிய களமாக அது இருந்தது. ஆனால் வாழ்க்கையைப் போலவே கால்பந்திலும் அனைத்தும் எளிதாக நடக்காது," என உருக்கமாக பேசினார்.

"இது என் அடுத்த அத்தியாயம். இங்கே முழு கவனத்துடன் இருக்க விரும்புகிறேன். எனது திறனை மேம்படுத்தி, அணிக்கு வெற்றி தர முயற்சிக்கிறேன்."

"மான்யூவுக்கு எதிர்காலத்தில் வெற்றிகள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன். ஆனால் இப்போது நான் பார்சிலோனாவிற்காக முழுமையாக தயாராக இருக்கிறேன்."

2016 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடெட்டின் தனது பயணத்தை தொடங்கிய ராஷ்ஃபோர்ட், மொத்தம் 426 போட்டிகளில் பங்கேற்று 138 கோல்களை அடித்துள்ளார். கிளப்பின் வரலாற்றில் 13வது அதிக கோல்கள் அடித்தவர் ஆவார். அத்துடன்  அதிகப் போட்டிகளில் பங்கேற்ற 20ஆவது விளையாட்டாளராக அவர் உள்ளார்.

ராஷ்ஃபோர்ட், மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இரண்டு எஃப்ஏ கிண்ணம், இரண்டு லீக் கிண்ணங்கள் மற்றும் 2017 ஆம் ஆண்டு யூரோப்பா லீக் ஆகியவற்றை வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset