நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செப்டம்பர் மாதம் முதல் ரோன் 95 பெட்ரோல் விலை 1.99 ரிங்கிட்டாக குறைக்கப்படும்: பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா:

வரும் செப்டம்பர் மாதம் முதல் ரோன் 95 பெட்ரோலின் விலை 1.99 ரிங்கிட்டாக குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

நாட்டு மக்கள் பயன் பெறும் நோக்கில் பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்பது மடானி அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.

தற்போது ரோன் 95 பெட்ரோலில் விலை 2.05 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது.

வரும் செம்டம்பர் மாதம் முதல் இந்த பெட்ரோலில் விலை 1.99 ரிங்கிட்டாக குறைக்கப்படும்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 18 மில்லியன் மக்கள் பயன் பெறுவார்கள்.

மேலும் பொதுமக்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி 1.99 ரிங்கிட் விலையிலான பெட்ரோலை பெற்றுக் கொள்ளலாம்.

மற்றவர்கள் சந்தை விலையின் அடிப்படையில் பெட்ரோலை பெறலாம் என்று பிரதமர் அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset