நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் பதவி விலக வேண்டும் பேரணியில் பங்கேற்க மாட்டோம்: யூஎஸ்எம் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவக் குழு அறிவிப்பு

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்படும் பேரணியில் பங்கேற்க மாட்டோம்.

யூஎஸ்எம் எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின்  மாணவர் பிரதிநிதித்துவக் குழு இதனை அறிவித்தது.

எந்தவொரு அரசியல் சித்தாந்தத்தையும் அனைத்து மாணவர்களும் ஆதரிக்கக் கூடாது.

மேலும் ஒரு சுயாதீனமான, நடுநிலையான, திறந்த நிறுவனமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் யூஎஸ்எம் மாணவர்கள் தற்போது இறுதிக் கட்ட தேர்வுக் காலத்தில் உள்ளனர்.

ஆகவே அனைத்து மாணவர்களும் நடந்து வரும் தேர்வுகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களாக, அறிவைத் தேடுவதும் கல்வியில் சிறந்து விளங்குவதும் நமது முக்கிய பொறுப்பு.

தேர்வுகளில் கவனம் செலுத்துவது என்பது அறிவுசார் மாணவராக ஒழுக்கம் மற்றும் தனிப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், பல்கலைக்கழகம் சமூகத்திற்கு அறிவுசார் பங்களிப்பின் ஒரு வடிவமாகும்.

அன்வார் பதவி விலக வேண்டும் பேரணியில் கலந்து கொள்ள உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு திறந்த அழைப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

வரும் ஜூலை 26 அன்று தலைநகரில் இந்தப் பேரணி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset