நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆடவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 சந்தேக நபர்களை போலிசார் தேடுகின்றனர்

சுபாங்ஜெயா:

ஆடவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 3 சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் இதனை உறுதிப்படுத்தினார்.

பூச்சோங்கின் ஜாலான் பெர்சியாரன் பூச்சோங் பெர்மாயில் நடந்த சண்டை சம்பவத்தில் உள்ளூர் நபர் ஒருவர் கடத்தப்பட்டார்.

நேற்று மாலை 6.38 மணிக்கு பல நபர்களால் ஒரு நபர் லோரியில் ஏற்றிச் செல்லப்பட்டதாக போலிஸ்க்கு தகவல் கிடைத்தது.

சம்பவம் குறித்து போலிசார் தற்போது மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்களையும் பாதிக்கப்பட்டவரையும் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset