நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக துருக்கி சென்றடைந்தார் தற்காப்பு அமைச்சர்

இஸ்தான்புல்:

தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின் மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணத்திற்காக இன்று அதிகாலை துருக்கி சென்றடைந்தார்.

இஸ்தான்புல் அனைத்துலக விமான நிலையத்தில் அவரை இஸ்தான்புலுக்கான மலேசிய தூதர், அஹ்மத் அமிரி அபு பாக்கார் வரவேற்றார்.

இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, காலிட் நோர்ஃபின் துருக்கிய தற்காப்பு அமைச்சர் யாசர் குலர்; அஜர்பைஜான் தற்காப்பு அமைச்சர் வுகர் முஸ்தபாயேவ் மற்றும் சூடான் தற்காப்பு அமைச்சர் ஹசன் தாவூத் கயான் உள்ளிட்ட பலரைச் சந்திக்க உள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset