
செய்திகள் மலேசியா
வசூலிக்கப்படும் வரியிலிருந்து கால் பங்கை ஜொகூர் மாநிலத்திற்கு தருவீர்: துங்கு இஸ்மாயில்
ஜொகூர்:
ஜொகூர் மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படும் வரியிலிருந்து கால் பங்கு அதாவது 25% வருவாயை மத்திய அரசு மாநிலத்திற்கே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அம்மாநில இடைக்கால ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த வருவாயைத் திருப்பி கொடுத்தால் அந்நிதி மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
மேலும், இந்த 25 விழுக்காடு வரி வருமானம், ஜொகூர் மற்ற தரப்பினரின் உதவியை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று துங்கு இஸ்மாயில் சுட்டிக் காட்டினார்.
மாநிலத்தில் பொது வசதிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்த நிதி உதவியாக இருக்கும் என்று துங்கு இஸ்மாயில் அறிக்கையில் தெரிவித்தார்.
ஜொகூரிலிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயில் 20 முதல் 30 விழுக்காடு வரை திருப்பித் தருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
ஜொகூர் அரசாங்கம் ஆண்டுக்கு RM48 பில்லியன் முதல் RM49 பில்லியன் வரை வரி வருவாயை மத்திய அரசுக்கு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
July 25, 2025, 10:17 pm
தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை எம்சிஎம்சி தொடங்கியுள்ளது
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm
பினாங்கு மாநிலத்தில் இருந்து டத்தோஶ்ரீ விருதை ஃபர்ஹாஷ் பெறவுள்ளார்
July 25, 2025, 5:03 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க துன் மகாதீர் தயாராகி வருகிறார்
July 25, 2025, 5:02 pm