
செய்திகள் மலேசியா
ஜனவரி முதல் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டதால் 35,446 பேர் வேலையை இழந்தனர்: ஸ்டீவன் சிம்
புத்ராஜெயா:
கடந்த ஜனவரி முதல் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டதால் 35,446 பேர் வேலைகளை இழந்தனர்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
இவ்வாண்டு நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டன.
இதை தொடர்ந்து ஜனவரி முதல் ஜூலை 4 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 35,446 நபர்கள் வேலையை இழந்தனர்.
சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் பதிவு செய்த தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை உள்ளது.
இருப்பினும், அதே காலகட்டத்தில், வேலை இழந்தவர்கள், புதிய வேலை தேடுபவர்கள் உட்பட 94,262 வேலை வாய்ப்புகளை சொக்சோ வெற்றிகரமாக ஏற்படுத்தி தந்துள்ளது.
ஒரு நிறுவனம் செயல்பாடுகளை மூடப் போகிறது அல்லது அதன் பணியாளர்களின் அளவைக் குறைக்கப் போகிறது என்று தெரிந்தவுடன்,
சொக்சோ ஒரு ஆரம்ப தலையீட்டு திட்டத்தை செயல்படுத்தும்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்ட புதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட செரியான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ரிச்சர்ட் ரியட் அனாக் ஜேமின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பேரப்பிள்ளை வீட்டில் கொள்ளை: 1.8 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு
July 25, 2025, 10:17 pm
தகவல் தொடர்பு தரவு ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து பொது ஆலோசனை பிரிவை எம்சிஎம்சி தொடங்கியுள்ளது
July 25, 2025, 5:27 pm
பிரதமரை நம்பி அவரின் சீர்த்திருந்த திட்டங்களை தொடர்வோம்: குணராஜ்
July 25, 2025, 5:04 pm
பினாங்கு மாநிலத்தில் இருந்து டத்தோஶ்ரீ விருதை ஃபர்ஹாஷ் பெறவுள்ளார்
July 25, 2025, 5:03 pm
25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க துன் மகாதீர் தயாராகி வருகிறார்
July 25, 2025, 5:02 pm