நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காப்பிக் கடைகளிலும், உணவங்காடி நிலையங்களிலும் ஐவர் வரை சேர்ந்து உணவருந்தலாம்: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு 

சிங்கப்பூர்:

தேர்ந்தெடுக்கப்பட்ட சில காப்பிக் கடைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும், ஐவர் வரை சேர்ந்து உணவருந்த இன்று முதல் அனுமதிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

7 காப்பிக் கடைகளும் 11 உணவங்காடி நிலையங்களும் அந்த முன்னோடித் திட்டத்தின்கீழ் வருகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பிக் கடைகளிலும், உணவங்காடி நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்யச் சோதனை முனையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இருப்பினும் வாரயிறுதியில் தான் அதிகமானோர் சாப்பிட வருவதாகச் சில கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் அமைக்கப்பட்டதும், காப்பிக் கடைகளில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, ஐவர் கொண்ட குழுக்களாக மக்கள் உணவருந்தலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

எஞ்சிய காப்பிக் கடைகள் அவற்றின் நடவடிக்கைகளை மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

புதிய நடவடிக்கைகளைக் கடைக்காரர்கள் வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset