செய்திகள் உலகம்
15 வருட வாழ்க்கைக்குப் பின் தனது பாலினத்தை உணர்ந்த இளைஞன்
ஜகார்தா:
மேற்கு ஜாவாவில் உள்ள ஓர் இளைஞன், 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணாக வாழ்ந்த பிறகு தனக்கு ஆண் பிறப்புறுப்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக செய்தி போர்டல் மஸ்ட் ஷேர் நியூஸ் நேற்று வெளியிட்டுள்ளது.
டேப் என அழைக்கப்படும் இந்த இளைஞன் , பிறக்கும்போது பெண்ணாக பிறந்ததாக உறுதி செய்யப்பட்டார். தனது சிறுவயதிலிருந்தே , இவர் பாவாடை , ஹிஜாப் போன்ற பெண்களின் ஆடைகளை அணிந்து வளர்ந்தார்.
ஆனால், தொடக்கப் பள்ளியில் கால்பந்து விளையாட்டில் தீவிரமாக விளையாடும்போது , டேப்பின் செயலில் ஓர் ஆணின் பாத்திரம் வெளிவரத் தொடங்கியதாக டேப்பின் தாய் கூறினார்.
அதோடு, டேப்பிற்கு மாதவிடாய் வராதபோது , கவலைப்பட்டதாகவும் டேப்பின் தாய் கூறினார்.
இருப்பினும், டேப்பின் சகோதரியும் 15 வயதில் தான் மாதவிடாய் வந்ததால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.
இந்நிலையில், திடீரென்று டேப்பிற்கு உடல் பரிசோதனை செய்த போது , டேப்பின் பிறப்புறுப்பு ஒரு ஆணின் பிறப்புறுப்பைப் போல இருப்பதைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே, பரிசோதனைக்காக அவரை சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்பரிசோதனையின் போது , டேப்பிற்கு ஆண் பிறப்புறுப்பு இருப்பதாகவும் , அவர் ஓர் ஆண் என்றும் மருத்துவர் உறுதி செய்தார் .
-சாமூன்டீஸ்வரி & மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2024, 4:04 pm
ரஷியாவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
December 22, 2024, 3:02 pm
சிங்கப்பூரில் 1000க்கும் அதிகமான அதிரடிச் சோதனை: 1,257 ஆண்களும் 616 பெண்களும் கைது
December 22, 2024, 11:51 am
நடுவானில் விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயன்ற பயணி
December 21, 2024, 10:09 pm
இலங்கையில் கோர பஸ் விபத்து: மூவர் பலி, 27 பேர் படுகாயம்
December 21, 2024, 6:10 pm
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஏமன்
December 21, 2024, 11:52 am
அமெரிக்க அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது
December 20, 2024, 10:50 pm
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 93.1 மீட்டர் கிறிஸ்துமஸ் ரொட்டி
December 20, 2024, 7:33 pm