நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நடுவானில் விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயன்ற பயணி

பேங்காக்:

தாய்லந்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் நடுவானில் Thai Airways விமானத்தின் அவசரக் கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளார்.

போதைப்பொருள் உட்கொண்ட பிறகு ஆடவர் அவ்வாறு செய்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

நல்ல வேளை, சுற்றி இருந்த பயணிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

சம்பவத்தைப் பயணிகள் சிலர் படம் பிடித்தனர்.

காணொலியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ஒருவர்...

"நான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலையை முதன்முறையாக எதிர்நோக்கினேன்," என்றார்.

அந்தக் காணொலி சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டது.

விமானம் பேங்காக்கின் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் காவல்துறை அதிகாரிகளும் விமானத்துறை ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆடவரைக் கைதுசெய்தனர்.

ஆடவரைத் தடுத்து நிறுத்த உதவிய பயணிகளுக்கு
Thai Airways நிறுவனம் நன்றி கூறியது.

பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவசரச் சூழ்நிலை ஏற்படும்போது அதனைச் சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் அது உறுதியளித்தது.

தைவானிலிருந்து பேங்காக் நகருக்குச் சென்றுகொண்டிருந்த TG637 விமானச் சேவையில் சம்பவம் நடந்ததாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset