நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் 1000க்கும் அதிகமான அதிரடிச் சோதனை: 1,257 ஆண்களும் 616 பெண்களும் கைது 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கழக வீடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 4 வெளிநாட்டுப் பெண்கள் கைதுசெய்யப்பட்டதாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.

சுவா சூ காங் ஸ்ட்ரீட் 52இலும் புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 24இலும் உள்ள கழக வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

அவர்கள் தொலைத்தொடர்புச் சேவைகள் மூலம் பாலியல் குற்றங்கள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தீவு முழுதும் நடத்தப்பட்ட 1000க்கும் அதிகமான அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் சுமார் 1,870 பேர் வெவ்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகின்றனர்.

அவர்களில் 1,257 ஆண்களும் 616 பெண்களும் அடங்குவர்.

அவர்கள் 15 வயதுக்கும் 85 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சோதனை நடவடிக்கை கடந்த மாதம் (நவம்பர் 2024) 16ஆம் தேதிமுதல் இம்மாதம் (டிசம்பர் 2024) 15ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

பல்வேறு காவல்துறை நிலப் பிரிவுகள் சோதனையை நடத்தின.

ஆதாரம்: 8 World செய்தித்தளம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset