
செய்திகள் தொழில்நுட்பம்
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் 30% விமானத்துறை வேலைகள் உருமாற்றம் காணக்கூடும்: போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்
சிங்கப்பூர்:
விமானத்துறையில் உள்ள 60,000 வேலைகளில் 30 விழுக்காடு வரையிலான வேலைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருமாற்றம் பெறக்கூடும்.
விமானத்துறை வேலை உருமாற்ற அறிக்கையில் இந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (ஜூலை 18) ‘ஒன்ஏவியேஷன் கரியர்ஸ் அண்ட் எட்யூகேஷன்’ கண்காட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மாற்றங்களைக் கையாள ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவ சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மனிதவள நிதியாக 200 மில்லியன் வெள்ளியை ஒதுக்கும். விமானத்துறை ஊழியர்களை ஈர்ப்பதற்கும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஊழியரணிகள், விமானத்துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்க அத்தொகை பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கண்காட்சியில் தெரிவித்தார்.
சாங்கி ஆகாயத்துறை மையத்தை மேம்படுத்த ஒரு பில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மனிதவள நிதி, அதில் அங்கம் வகிக்கிறது.
ஓராண்டு நீடித்த விமானத்துறைக்கான ஆய்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அந்த ஆய்வை நடத்துமாறு சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் சென்ற ஆண்டு உத்தரவிட்டன.
சிங்கப்பூரின் விமானத்துறைக்கு இதுபோன்ற ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதல்முறை.
தற்போதைய ஊழியரணி, வருங்காலத்தில் காணப்படக்கூடிய போக்குகள் பற்றி அறிக்கையில் கண்டறியப்பட்டன. பின்னர் வருங்காலத்தில் ஊழியரணியை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் செய்தியறிக்கையில் குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கமயமாதல், தானியக்கமயமாதல், பயனீட்டார்களிடையே மாறும் விருப்பங்கள், வேலை தொடர்பில் ஊழியர் விருப்பங்களில் காணப்படும் மாற்றங்கள், நீடித்த நிலைத்தன்மை ஆகிய ஆறு அம்சங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில விமானத்துறை வேலைகளிலும் திறன்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தப் போக்குகள் தற்போதுள்ள வேலைகளில் 30 விழுக்காடு வரை பாதிக்கும். மேலும் ஊழியர்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது மறு திறன் பயிற்சி பெற வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm