நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா

புது டெல்லி:

சர்வதேச விண்வெளி நிலையத்தில், 18 நாட்களுக்கு பிறகு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர்  பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவும் இணைந்து சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி கடந்த மாதம் 25ம் தேதி, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'பால்கன் 9' ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து புறப்பட்டனர்.

28 மணி நேர பயணத்திற்குபின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அவர்கள் அடைந்தனர். அங்கு 18 நாள்கள் தங்கி பல்வேறு ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 433 மணி நேரத்தை செலவிட்டு பூமியை 310 க்கும் மேற்பட்ட முறை சுற்றிய அந்தக் குழு டிராகன் விண்கலம் வாயிலாக 22 மணி நேரம் பயணம் செய்து  அமெரிக்காவில் டிராகன் விண்கலன் மூலம் வந்திறங்கியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset