நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர்: அமீர் ஹம்சா

கோலாலம்பூர்:

பூடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர்.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் இதனை கூறினார்.

தகுதியுள்ள 16.5 மில்லியன் நபர்களில் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் அல்லது 88% க்கும் அதிகமானோர் லிட்டருக்கு 1.99 ரிங்கிட் விலையில் ரோன் 95 விலையை அனுபவிக்கின்றனர்.

இதில் 2026 பிப்ரவரி 28 நிலவரப்படி 12.8 பில்லியன் ரிங்கிட் விற்பனை மதிப்பு அல்லது 6.46 பில்லியன் லிட்டர் நுகர்வு அடங்கும்.

இது மைகார்ட் நடைமுறையை  பிரதிபலிக்கிறது. இது எளிதில் அணுகக்கூடியது.

நிலையானது. மக்களால் நன்கு வரவேற்கப்படுகிறது.

பூடி மடானி ரோன் 95  ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. ரோன் 95 பெட்ரோல் மானியம் வெளிநாட்டினருக்கு கசிவைத் தடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் மக்கள் லிட்டருக்கு 1.99 ரிங்கிட் விலையில் மானிய விலையில் ரோம் 95 ஐ தொடர்ந்து அனுபவிக்கின்றனர்.

மக்களவையில் மாமன்னரின் அமைச்சகத்திற்கான உரையின் மீதான விவாதத்தின் இறுதி அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset