நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தோல்வி: இரண்டு வாக்குகள் தவறிவிட்டன

கோலாலம்பூர்:

பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு பதவிக் காலங்களாக அல்லது 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா இரண்டாவது வாசிப்புக்கு மக்களவை உறுப்பினர்களிடமிருந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது.

வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், மசோதாவுக்கு 146 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது.

சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் முடிவை அறிவிக்கும் போது, ​​44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பைத் தவிர்த்துவிட்டது.

மேலும் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

கூட்டரசு அரசியலமைப்பை திருத்துவது தொடர்பான இந்த மசோதாவிற்கு, மக்களவை உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை என்று அவர் கூறினார்.

முன்னதாக, அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதத்தில் 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் பிரதமருக்கான பதவிக்கால வரம்பு பேரரசரின் சிறப்பு அதிகாரங்களை அரிக்கும் என்று வாதிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset