நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

E.coli பாக்டீரியா பரவல் காரணமாக செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு

சிங்கப்பூர்:

செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. E.coli பாக்டீரியா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செந்தோசாவில் நடக்கவிருந்த உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் கிண்ணப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதற்கு நீரில் அதிகமான அளவு E.coli பாக்டீரியா இருந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இன்று காலை 10.15 மணிக்கு மகளிர் 10 கிலோமீட்டர் பந்தயம் நடைபெறவிருந்தது.

நீரில் E.coli பாக்டீரியாவின் அளவு எப்படி அதிகரித்தது என்பது இன்னும் தெரியவில்லை என்று போட்டியின் நிர்வாக இயக்குநர் பிரன்ட் நொவிகி கூறினார்.

இன்று காலை நீர் மீண்டும் சோதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

முதற்கட்ட முடிவுகள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் நாளை பந்தயம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset