செய்திகள் விளையாட்டு
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
கோலாலம்பூர்:
உலகப் புகழ்பெற்ற தாமஸ் கிண்ணப் போட்டிக்குத் தயாராகும் வகையில், மலேசிய ஆடவர் பூப்பந்து அணி டென்மார்க்கில் 10 நாட்கள் தங்கித் தீவிரப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
வீரர்களின் உடல் தகுதியுடன், மனவலிமை, ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்துவதே இந்த இறுதி கட்டப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும் என மலேசிய பூப்பந்து அகாடமியின் (ABM) பயிற்சியாளர் ரெக்ஸி மைனகி தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் உள்ள ஒரு அமைதியான பகுதியைத் தேர்வு செய்திருப்பது குறித்துப் பேசிய ரெக்சி, அந்த இடம் அணியின் பயிற்சியாளர் கென்னத் ஜோனாசென் சொந்த ஊர் என்று குறிப்பிட்டார்.
வெளி உலகத் தொடர்புகளோ அல்லது கவனச்சிதறல்களோ இல்லாத ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வீரர்கள் தங்கியிருப்பது, அவர்களின் ஆட்டத்தில் கூடுதல் கவனத்தைச் செலுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"அந்த இடம் மிகவும் அமைதியானது, அங்கே பயிற்சியைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட ரெக்ஸி மைனகி, அத்தகைய சூழல் வீரர்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்றார்.
தாமஸ் கிண்ணப் போட்டியில் மலேசிய அணி தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவதை உறுதி செய்ய இத்தகைய கடினமான பயிற்சிகள் அவசியமாகின்றன.
பயிற்சி முகாம் முடிவடைந்ததும், மலேசிய அணி புத்துணர்ச்சியுடன் தாமஸ் கிண்ணப் போட்டியில் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களின் மனநிலையைச் சீராக்கவும், அணியின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த டென்மார்க் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 3:57 pm
ஹரிமாவ் மலாயாவின் ஆசியக் கிண்ணக் கனவு சிதைந்தது
March 17, 2026, 3:00 pm
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்றுங்கள்: ஈரான் கோரிக்கை
March 17, 2026, 10:47 am
மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ரியல்மாட்ரிட் அணியை வலுப்படுத்த எம்பாப்பே மீண்டும் வருகிறார்
March 17, 2026, 10:44 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல ஆர்வமாக உள்ளேன்: மெஸ்ஸி
March 16, 2026, 2:47 pm
ஹரிமாவ் மலாயா அணி 2031 ஆசிய கிண்ணத் தகுதி போட்டியில் தடைசெய்யப்படமாட்டாது: AFC
March 16, 2026, 10:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 16, 2026, 10:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
March 15, 2026, 10:37 pm
ஆஸ்திரேலிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை சிவசங்கரி வென்றார்
March 15, 2026, 9:39 am
