செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு அர்செனல் அணியினர் முன்னேறி உள்ளனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் இரண்டாவது ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பாயர் லெவர்குசன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பாயர் லெவர்குசன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை எபெரெச்சி ஈஸ், டெக்லான் ரைஸ் ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 3-1 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்செனல் அணியினர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் பாடோ கிளிம்ட் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்போர்டிங் சிங் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
ஹரிமாவ் மலாயாவின் ஆசியக் கிண்ணக் கனவு சிதைந்தது
March 17, 2026, 3:00 pm
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்றுங்கள்: ஈரான் கோரிக்கை
March 17, 2026, 10:47 am
மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக ரியல்மாட்ரிட் அணியை வலுப்படுத்த எம்பாப்பே மீண்டும் வருகிறார்
March 17, 2026, 10:44 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல ஆர்வமாக உள்ளேன்: மெஸ்ஸி
March 16, 2026, 2:47 pm
ஹரிமாவ் மலாயா அணி 2031 ஆசிய கிண்ணத் தகுதி போட்டியில் தடைசெய்யப்படமாட்டாது: AFC
March 16, 2026, 10:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 16, 2026, 10:39 am
