செய்திகள் உலகம்
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
புத்ராஜெயா
மலேசியாவிற்கான அமெரிக்க தூதராக நிக் அடம்ஸ் என்ற இஸ்ரேல் ஆதரவு கொண்ட நபர் பரிந்துரைக்கப்படுவதாக வெளியான செய்திக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தூதர் நியமனங்களை ஏற்கவும் மறுக்கவும் ஒரு சுந்தந்திர நாடாக மலேசியாவுக்கு முழுமையான உரிமை உள்ளது என்று தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபசில் தெரிவித்தார்.
"எந்த வெளிநாட்டு தூதர் வருவதாக இருந்தாலும், அந்த நபருக்கு நமது அரசாங்கம் ஒப்புதல் தர வேண்டும். அதேபோல், நாம் நமது தூதர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் போதும், அந்த நாடு ஒப்புதல் தரவேண்டும் என,"தூதர் நியமனம் தொடர்பான உலகளாவிய நடைமுறையான ஒப்பந்தம்' (agrément) குறித்து அவர் கருத்துரைத்தார்.
அரசுக்கான பேச்சாளராகவும் செயல்படும் ஃபாஹ்மி, Wisma Putra (வெளியுறவுத் துறை) அமைச்சகம் இதுவரை அமைச்சரவைக்கு நிக் அடம்ஸ் பற்றிய அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
உலகளாவிய சட்டத்தின் கீழ், ஒரு நாடு எந்தவொரு தூதர் நியமனத்தையும் காரணம் குறிப்பிடாமல் தன்னிச்சையாக மறுக்கும் உரிமை உள்ளது என்பதும் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், நிக் அடம்ஸை மலேசியாவுக்கான தூதராக நியமிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தார். அவர் நிக் அடம்ஸை “அமெரிக்காவின் பெருமையை பாதுகாக்கும் நற்குணங்களுடன் கூடிய தேசபக்தி கொண்டவர்” எனவும் புகழ்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
