செய்திகள் மலேசியா
மருத்துவமனை சவக் கிடங்கில் கையூட்டுகள் வாங்குவதை நிறுத்துங்கள்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
புத்ராஜெயா:
மருத்துவமனை சவக் கிடங்கில் கையூட்டுகள் வாங்குவதை அங்குள்ள பணியாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளுக்கும் சமீபத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சுகாதார அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சவக்கிடங்கில் உடல்களைக் கையாள்வதற்கு அல்லது இறந்தவர் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு ஈடாக எந்த வகையான பணம், பரிசு அல்லது பங்களிப்பையும் பெற வேண்டாம்.
பணத்தைப் பெறுவது அல்லது இறுதிச் சடங்கு சேவை முகவர்களுடன் ஒத்துழைப்பது ஊழலாகக் கருதப்படலாம்.
மருத்துவமனை ஊழியர்கள் மூன்றாம் தரப்பினருக்கு குறிப்பாக இறுதிச் சடங்கு சேவை நிறுவனங்கள் அல்லது அவர்களின் முகவர்களுக்கு இறந்தவர் பற்றிய எந்த தகவலையும் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவக்கிடங்கின் சேவைகளின் நேர்மையைப் பாதுகாப்பதற்கும், எந்தவொரு குறுக்கீடும் அல்லது தவறான நடத்தைகளும் இல்லாமல் உடல்கள் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
உடல்கள் நெருங்கிய உறவினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, வெளிப்புற தரப்பினர் யாரும் உடல்களை நிர்வகிப்பதில் ஈடுபடக்கூடாது என்பதை மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இறுதிச் சடங்கு முகவர்கள் பிணவறைப் பகுதியில் சுற்றித் திரிய அனுமதிக்கக்கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 2:53 pm
ஏழை மக்களுக்காக இரண்டு டன் சாடோ மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது
May 25, 2026, 11:02 am
காசா குறித்து மலேசியா மௌனம் காக்காது: அமிருதீன் சூளுரை
May 25, 2026, 9:59 am
பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 பேர் பலி: பெட்ரோனாஸ் அறிவிப்பு
May 24, 2026, 10:51 pm
