நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது

கோலசிலாங்கூர்:

கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

சிலாங்கூர் மாநிலத்தில் இயற்கையழகும், எழிழ்வளமும், நிறைந்த கோலாசிலாங்கூர் மாவட்டத்தின் இந்த கமாசான் தோட்டம் அமைந்துள்ளது.

150 ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்ட இத் தோட்டத்தில் ஸ்ரீ மஹா துர்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலதத்தின் திருப்பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் குருசாமி நாகு தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சரியாக காலை 10.50க்கு ஆலய கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.

அதன் பின் நடந்த பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மஹிமா தலைவரும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவகுமார் டான்ஸ்ரீ நடராஜா இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.

ஆலயத் துணைத் தலைவர் கணேசன் ஆண்டியப்பன், செயலாளர் வேல் முருகன், பொருளாளர் சதிஸ் சங்கரலிங்கம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset