
செய்திகள் மலேசியா
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
சுங்கைப்பட்டாணி:
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் இதனை உறுதிப்படுத்தினார்.
நேற்று காலை இங்குள்ள புக்கிட் செலம்பாவ், தாமான் செம்பாகா இந்தாவின் இக்குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதை அடுத்து, பொதுமக்கள் அக்குழந்தையை கவனித்தனர்.
புக்கிட் செலம்பாவ் போலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு, சம்பவ இடத்தில் ஓர் ஆண் குழந்தை அழுவதைக் கண்டதாக பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்தது.
குழந்தை துணிகள் இல்லாமல், போர்வை கொண்டு சுற்றி அவ்விடத்தில் கைவிடப்பட்டிருந்தது.
மீட்கப்பட்ட ஆண் குழந்தையை மேலதிக பரிசோதனைக்காக சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவமனை கொண்டு சென்றதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 4:33 pm
சுங்கை சிப்புட் பள்ளிவாசலில் சமய நல்லிணக்கத்துடன் ஆஷூரா கஞ்சி வழங்கப்பட்டது
July 13, 2025, 4:23 pm
துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm