நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

SG Culture Pass - சிங்கப்பூர்க் கலாசாரத்தைக் கட்டிக்காக்க வேண்டும்: பிரதமர் வோங் வேண்டுகோள் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரர்கள் வரும் செப்டம்பர் 1 முதல் SG Culture Pass எனும் கலாசாரச் சிறப்புத்தொகையைப் பயன்படுத்தலாம்.

அது குறித்துப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது சமூக ஊடகப் பக்கங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

"இந்த SG60 ஆண்டில் பலவற்றைக் கொண்டாடலாம். குறுகிய காலக்கட்டத்தில் நாம் சிங்கப்பூர் கலாசாரத்தையும் அடையாளத்தையும் உருவாக்கியுள்ளோம். கலாசாரம் மாறிக்கொண்டே இருக்கும். முடிந்தவரை நாம் ஒன்றிணைந்து இந்தச் சிங்கப்பூர்க் கலாசாரத்தைக் கட்டிக்காக்கப் பங்காற்றவேண்டும்," என்றார் திரு வோங்.

வரும் செப்டம்பர் 1 முதல் தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் கலாசாரச் சிறப்புத்தொகையைப் பெறுவர்.

அதனைச் சிங்கப்பூரர்கள் நல்வழியில் பயன்படுத்துவர் என நம்புவதாகத் வோங் குறிப்பிட்டார்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset