நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காதலனை மோசடி கும்பலிடம் காசுக்கு விற்ற காதலி 

பெய்ஜிங்:

சீனாவைச் சேர்ந்த பெண் 100,000 யுவான் பணத்திற்காகக் காதலனை மியன்மார் மோசடி கும்பலிடம் விற்றுள்ளார்.

19 வயது ஹுவாங்கை (Huang) அவரது குடும்பத்தினர் 350,000 யுவான் (சுமார் 62,500 வெள்ளி) செலுத்தி மீட்டனர்.

சம்பவம் குறித்து அவரது சகோதரி சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாக Xiaoxiang Morning Herald விவரம் வெளியிட்டது.

ஹுவாங் 17 வயது சோவைச் (Zhou) சந்தித்து காதல் வயப்பட்டார். இருவரும் ஒன்றாக வசித்தனர்.

ஹுவாங்கை மியன்மாரில் வேலை தேடுமாறு சோவ் வற்புறுத்தினார்.

ஹுவாங் குடும்பத்தினரிடம் சொல்லாமல் சோவுடன் தாய்லந்துக்குச் சென்றார்.

அங்கு அவர் மோசடி கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டர்.

ஹுவாங் நான்கு மாதங்களுக்கு மியான்மரில் அவதிப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மோசடி கும்பல் அவரை அடித்துத் துன்புறுத்தியதில் அவரது செவித்திறனை இழந்தார்.

கைத்தொலைபேசி கிடைத்தபோது அவர் குடும்பத்தினரைச் தொடர்புகொண்டார்.

அவர்கள் பேரம் பேசி பணத்தைச் செலுத்தவும் ஹுவாங் விடுவிக்கப்பட்டார்.

காதலனை விற்ற பெண் மீது விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது. 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset